Thursday, July 25, 2013

கமோடிடி வணிகம் வசப்பட...




எத்தனை முறை நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டு வணிகத்தில் ஈடுபட்டாலும் , தோல்வி என்பது தவிர்க்கமுடியாதது ஆகிவிட்டது, எப்படி முயன்றாலும், வெற்றி என்பது இங்கே மாயையாக , கானல் நீராகவே ஆகிவிட்டது, என வாடும் அன்பு வணிகர்களே!

உங்களுக்காக,தோல்வியின் வேகத்தைத்தவிர்க்க, வெற்றிக்காற்றை சுவாசிக்க  ஒரே ஒரு இலகுவான, வழி! முயன்று பாருங்கள்!

நீங்கள் தேர்ந்தெடுக்கும் வணிக நேரம், வணிகத்தில் மாற்றம் அதிகம் நிகழ வாய்ப்பில்லாத, சந்தைப்புள்ளி விபரங்கள் வராத நாளாக இருக்கட்டும்!



பொருட்களின் வால்யூம் சீராக இருக்கும் போது , அப்போதைய அதன் உச்ச்த்தையோ அல்லது கீழ்நிலையையோ அடையுன் முன், நீங்களாக அதன் அதிகத்தில் ஒரு உத்தேச அதிக விலையையோ அல்லது உத்தேச கீழ் நிலை விலையையோ ஆர்டர் செய்துவிட்டு, காத்திருங்கள்! நீங்கள் உத்தேசமாக குறிப்பிட்ட விலையில் உங்கள் ஆர்டர் எக்ஸிகியூட் ஆகிவிட்டால்,நீங்கள் எண்ணும் நிலைக்கு அருகாமையில் விலை வரும் போது , மார்க்கெட் ஆர்டர் மூலம் வணிகத்தை நிறைவு செய்யுங்கள்! 

                                                     

வெற்றியை வசப்படுத்துங்கள்!


எச்சரிக்கை, மிக மிக அதிக கவனமாக , வணிகத்தை நிறைவு செய்யுங்கள்!


எதிர்பார்த்த விலை வந்தவுடன் வணிகத்தை நிறைவு செய்யாமல், இன்னும் கொஞ்சம் பார்ப்போம் என எண்ணினால், வணிகம் நிச்சயம் தோல்வியில் முடிய வாய்ப்புகள் அதிகம்!

வாழ்த்துக்கள்! 
அமைதியான வெற்றிகளால்,தோல்விகளுக்கு விடை கொடுங்கள்!
மீண்டும் சந்திப்போம்!

ஞானக்குமாரன்.