Monday, March 18, 2013

கம்மோடிடி மார்க்கெட்


கம்மோடிடி மார்க்கெட்

இதுவரை நாம் கம்மோடிடி மார்க்கெட் பற்றியும் அதில் வணிகமாகிற பொருட்கள் பற்றியும் பார்த்தோம்,

இனி நாம், கம்மோடிடி மார்க்கெட் பொருட்கள் விலை ஏற்றம்,இறக்கம் பற்றியும், வணிகம் செய்வதைப்பற்றியும் , காண்போம்.

பொருட்களின் விலை ஏற்ற,இறக்கத்தின் முக்கிய காரணி ,   யு எஸ் டாலரின் சர்வதேச மதிப்பு.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகளால், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்ற நாடுகளின் கரன்சிக்கு எதிராக அதிகரிக்கும் அல்லது குறையக்கூடும்.

மற்றும், ஏற்கெனவே, குறிப்பிட்டது போல, வணிகமாகும் பொருட்களின் கூடுதல் உற்பத்தி, மற்றும் தேவைக்கு குறைவான சந்தை இருப்பு போன்ற காரணங்களால், பொருட்களின் விலையில் மாற்றம் வரும்.

 இதுபோன்ற காரணங்களாலும், மற்றும் அமெரிக்க பொருளாதார வாராந்திர அறிக்கைகளாலும், சந்தையில் மாற்றம் வரும். உதாரணமாக , அமெரிக்க வாராந்திர அன் எம்ப்ளாய்மென்ட் அறிக்கையில் , எதிர்பார்ப்புக்கு மேல் ,வேலை இல்லாதோர் இருந்தால் , அந்த நேரம் சந்தையில் , தங்கம் ,வெள்ளி உள்ளிட்ட சில பொருட்கள் விலை சரியும்.

நல்லது, நாம் இப்போது சற்றே , கம்மோடிடி மார்கெட் பற்றியும் அதன் பொருட்களின் விவரம் ,விலை , மற்றும் விலை மாற்றகே காரணிகளைப்பற்றி, சற்றே சுருக்கமாக, எளிமையான வகையில், பார்த்தோம்.

உங்களுக்கு, பயனுள்ள வகையில் , விளக்கம் இருந்திருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் , கருத்துக்களை எதிர்நோக்கி ,

அன்புடன்,

ஞானகுமாரன்.







Saturday, March 2, 2013

கமோடிட்டி மார்கெட் - பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் வணிகம்.




கமோடிட்டி மார்கெட் என்றால் என்ன,என்பதைப்பற்றியும் ,அதில் வணிகமாகின்ற பொருட்களைப்பற்றியும், சென்ற பதிவில் பார்த்தோம், இனி, அதன் அடுத்த நிலையைக் காணலாம்.

கமோடிட்டி பொருட்களின் விலை நிர்ணயம் மற்றும் வணிகம்.


கமோடிட்டி மார்க்கெட் , உலகின் பல சந்தைகள் மற்றும் உலக பொருளாதார நிலைக்கேற்றவாறு இயங்குகிறது. இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.


உதாரணத்திற்கு, சந்தையில் அதிகம் வணிகமாகும் காப்பர் பற்றி பார்போம்.

காப்பர்,zinc ,lead ,அலுமினியம்,நிக்கல் போன்றவை   BASE METAL எனப்படும், இவை உலகில் பல நாடுகளில் உற்பத்தி ஆனாலும், இவை பொதுவாக ,லண்டன் மற்றும் அமெரிக்க கம்மோடிடி சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, விற்பனையாகின்றன.


இவற்றின் மொத்த மாதாந்திர , வருடாந்திர இருப்பு நிலவரம், விலை ,மார்க்கெட் ஆர்டர்கள்,போன்றவை அன்றாடம் நாம் அறியும் வகையில்,இணைய தளங்கள் வாயிலாக , வெளியிடப்படுகின்றன.

உலகில் ஒரு நாடு தன் தேவைக்கு, காப்பர் இறக்குமதி செய்கிறது, அதன தேவைகள் அதிகரிக்கும்போது, காப்பர் உற்பத்தி [ காப்பர் ஸ்டாக் ] சந்தையில் குறைவாக இருந்தால் , காப்பரின் விலை உயரும், மாறாக அதன் தேவைகள் குறையும்போது , காப்பர் ஸ்டாக்கும் அதிகம் இருந்தால் விலை குறையும் வாய்ப்பு உண்டு.

இது உதாரணத்திற்கு தான் , கம்மோடிடி பொருட்கள் விலை ஏற்ற இறக்கத்திற்கு வேறு பல முக்கிய காரணங்களும் உண்டு.

இப்போது மற்ற ஒரு முக்கியமான காரணியை பார்ப்போம், மேல் குறிப்பிட்டதைப்போல் , மார்கெட்டில் காப்பர் அதிக தேவை உள்ளது, உற்பத்தியும் குறைவாக உள்ளது , ஆனால் , விலை ஏற வில்லை, மாறாக சற்றே குறைந்து விற்பனை ஆகிறது, ஏன்?

இதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான காரணியான கரன்சி மார்க்கெட் அல்லது  ஃபாரெக்ஸ் மார்க்கெட்.

இன்று உலகின் பொது கரென்சியாக அமெரிக்கப்பணமான , டாலர் உள்ளது,உலகின் எந்த நாடுகளும் , மனிதர்களும் , பிற நாடுகளிடமிருந்து, பொருளோ, சேவையோ பெறும்போது, அதற்கு பணம் அமெரிக்க டாலரில் தான் அளிக்க வேண்டும், [ இதற்கு மாற்றாக பல முயற்சிகள் தொடங்கி நடக்கின்றன , என்பது வேறு விஷயம், அதை பிறகு காணலாம்]

இந்த அமெரிக்க டாலர், பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக்  காரணிகளால் , ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகும்,  FOREX எனப்படும் கரன்சி மார்க்கெட்டில்.அமெரிக்க டாலர் மட்டும் இலை, உலகின் அனைத்து நாடுகளின் பணமும் இங்கு வர்த்தகமாகும், இதை ஜஸ்ட் தெரிந்து கொண்டால் போதும் , இது மிகப்பெரிய சப்ஜெக்ட், எனவே இத்துடன் , நாம் மீண்டும் கம்மோடிடி மார்க்கெட் சென்று விடுவோம், வாருங்கள்.

மேலே குறிப்பிட்ட போரெக்ஸ் வணிக, ஏற்ற இறக்கங்களினால் அமெரிக்க டாலருக்கு நிகரான, நம்முடைய இந்திய ரூபாய் மதிப்பு, கூடும் அல்லது குறையும்.

மேலும் இந்திய பொருளாதாரம் சற்றே முன்னேற்றம் காணும்போதும், அமெரிக்க பொருளாதாரம் சரியும்போதும், டாலருக்கு நிகரான , இநதிய ரூபாய் மதிப்பு அதகரிக்கும்.

அப்போது கம்மோடிடி மார்க்கெட் பொருட்கள் விலைகளும்  , இறக்கத்துடன் இந்திய கம்மோடிடி சந்தையில் ,காணப்படும்.
 [உலக கம்மோடிடி சந்தைகள் அமெரிக்க டாலர் மதிப்பில் இயங்குவதால்]

இந்த விலை மாற்றம், கம்மோடிடி சந்தையில் வணிகமாகும் தங்கம்,வெள்ளி,க்ருட் ஆயில், உள்ளிட்ட எல்லாப்பொருட்களுக்கும் பொருந்தும்.

அவ்வளவுதான் , கம்மோடிடி சந்தையில் பொருட்களின் விலையை  நிர்ணயிக்கும் சர்வதேச காரணிகளின் தகவல்கள் !

இத்துடன் இன்றைய பகுதியை நிறைவு செய்வோம் , மீண்டும் சந்திப்போம், நன்றி!







Friday, March 1, 2013

கம்மோடிடி வணிகம் - அறிமுகம்



வணக்கம் !


நேற்றைய பதிவில் குறிப்பிட்ட கம்மோடிடி அடிப்படை விசயங்களில் ஒன்றை, இன்று தெரிந்து கொள்வோம்!


1. கம்மோடிடி வணிகம் என்றால் என்ன?







கம்மோடிடி வணிகம் புதிதான ஒன்றல்ல நம் முன்னோர்கள் இதில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள், மன்னர் காலத்திலும் பிற்காலத்திலும் , கம்மோடிடி வணிகம் பண்ட மாற்று முறையில் காணப்பட்டது, உதாரணமாக, கடல் கடந்து வாணிபம் செய்ய நம் நாட்டிற்கு வந்த வியாபாரிகள் நம்மிடம் இருந்து அரிசி,தானியங்கள் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றாக குதிரைகளும்,பட்டு துணிகளும் வழங்கினர். 

அதே தான் இங்கும் , என்ன பண்ட மாற்றுக்கு பதில் கரன்சியில் வர்த்தகம், அதாவது, பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியுமே தவிர வேறு பொருட்களை கொண்டு வாங்க இயலாது.இன்றைய அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தால், இன்று வணிகம் அதன் உச்ச நிலையில் இருக்கிறது.
அதே போல் , உலக நாடுகளில் அரசாங்க ஒப்புதலோடு , வழிகாட்டுதலோடு, கம்மோடிடி சந்தைகள் இயங்குகின்றன. இந்தியாவில் கம்மோடிடி சந்தை நிர்வாகம் மத்திய அரசின் அனுமதியோடு இயங்குகின்றது.கம்மோடிடி சந்தை உலக கம்மோடிடி சந்தை நிலவரத்தை ஒட்டியே இயங்கின்றன.வணிகச் சந்தையின் தரகர்கள் எனச் சொல்லப்படும் நிறுவனங்கள் மூலம் வணிகம் தினசரி நடைபெறுகிறது, நாம் வணிகம் செய்ய ஒரு தரகரிடம் நாம் உறுப்பினராக சேர வேண்டும்.

வணிகத் தரகர்கள் உறுப்பினர்களுக்கு [ அதாவது நம்மைப் போன்றவர்களுக்கு ] அளிக்கும் சேவை ,வணிகத் தகவல்கள்,  பணப் பரிமாற்றம், வணிக தரகு [ BROKERAGE ]போன்றவற்றில் வெளிப்படை தன்மை ஆகியவற்றை கம்மோடிடி சந்தை உறுதி செய்கின்றன.

இங்கு 2 விதமாக, வணிகம் செய்யலாம்,




ஒன்று பொருட்களை வாங்கும் பொருட்டு வணிகம் செய்வது, உதாரணமாக தங்கம் மற்றும் வெள்ளி.

மற்றது, பொருட்களை நாம் வாங்கிக்கொள்ளாமல் , அதன் விலை நிலவரத்தை ஒட்டி online ல் வாங்குவது , நமக்கு இலாபம் கிடைத்தவுடன் விற்று விடுவது.

இங்கே வணிகமும் 2 விதமாக செய்யலாம், ஓன்று வாங்கி விற்பது , மற்ற ஒன்று விற்று வாங்குவது. இதைப்பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.

கம்மோடிடி சந்தைகளும் 2 உள்ளன, ஒன்று உலகாவிய வணிகப் பொருட்களான PRECIOUS METAL எனச் சொல்லப்படும் GOLD ,SILVER, BASE METAL எனச் சொல்லப்படும் COPPER, ALUMINIUM, NICKEL , LEAD , ZINC மற்றும் ENERGY பொருட்கள் எனச் சொல்லப்படும் CRUDE OIL , NATURAL GAS போன்ற பொருட்கள் விற்பனையாகும் MCX என்ற சந்தையும் ,

மற்றும் நம் நாட்டில் உற்பத்தியாகும் SPICE [ மிளகு, ஏலக்காய் ,உருளை போன்ற பொருட்கள் விற்பனையாகும் NCDX என்ற ஒரு சந்தையும் செயல்படுகின்றன.

இரண்டிலும் நாம் வணிகம் செய்யலாம், எனினும் MCX  உலகளாவிய மார்க்கெட் பொருட்கள் விற்பனைச் சந்தை என்பதாலும் மற்றும் பொருட்களைப் பற்றிய உடனடி உலகளாவிய சந்தை நிலவரம் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாலும் , எல்லோரும் வணிகம் செய்யும் சந்தையாக உள்ளது.

Traders யாவரும் இலாபம் சம்பாதிக்கவே வருகின்றனர், அவரவர், வசதி, நேரம் ,  கம்மோடிடி சந்தையைப்பற்றிய அனுபவம் மற்றும்

தேர்ச்சி,உள்ளிட்ட பிற காரணிகளைப பொறுத்து, அவர்களின் வணிக முயற்சி வெற்றி பெறுகிறது.

இப்போது ஓரளவு , நீங்கள் கம்மோடிடி சந்தையைப்  பற்றி அறிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

மீண்டும் சந்திப்போம், மற்றுமொரு தகவலுடன்.

நன்றி!