Sunday, June 23, 2019

காலத்தை உணர்வோம் ! வணிகத்தில் வெல்வோம்!!

காலமறிந்து பயிர் செய் என்றார்கள் முன்னோர்கள்!

அதுபோல காலமறிந்து வணிகம் செய்தால்,
பொருள் வளமும் வெற்றிகளும் விளையும்!


காலத்தை உணர்வோம் ! வணிகத்தில் வெல்வோம்!!





Thursday, July 20, 2017

கற்றதை நினைவில் கொண்டு,


கற்றதை நினைவில் கொண்டு,
கற்றதின் பொருள் உணர்ந்து 
நிகழ்வில் நின்று, நிலையான 
வணிகம் செய்யவே, 

வாழ்த்துக்கள் அனைவருக்கும்!


Saturday, October 29, 2016

தீப ஒளித்திருநாள்




அன்பர் அனைவருக்கும் 

புத்தொளி மயமான 

தீப ஒளித்திருநாள் 



நல்வாழ்த்துக்கள்!

Monday, October 24, 2016

நல்வாழ்த்துக்கள்!!

வணக்கம்! 


இனிய பண்டிகைக்கால  வாழ்த்துக்கள்!!

கவனமுடன் பொருள் வணிகம் செய்து , சிறப்புடன் வாழ ,

நல்வாழ்த்துக்கள்!!





ஞானா.

Thursday, January 14, 2016

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



அன்பர் அனைவருக்கும் 
உளங்கனிந்த 
தமிழர் திருநாள் 
தைப்பொங்கல் 
நன்னாள் நல்வாழ்த்துக்கள்!



Sunday, March 1, 2015

தேடுவோம் வெல்லும்வரை!

வணக்கம் அன்பர்களே!

                                            எமது கட்டுரையை வாசித்திருப்பீர்கள் வாசித்து , நாம் அறிந்ததுதான் , எனினும் ஒரு RECAP மறுநினைவாக , நினைவினிலே கொள்ள வேண்டியவைதான் என எண்ணியிருப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி!

மேலும், சில பொது விசயங்கள் , வணிகத்திற்கு அப்பாற்பட்டு  இந்தத்தளம் சார்ந்த விசயங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

1. இந்தத்தள தகவல்கள்  எமது சொந்த அனுபவங்கள் சார்ந்தவை. 

2. 10 ஆண்டுகால அனுபவ வழிக்கற்றலின் பயனாக இழப்புகள்,வரவுகள் சமமாகச் சந்தித்து   நாம் அறிந்தவை , நீவீர் அறியவும், யாம் இழந்தவை நீவீர் அறிந்து விலகியிருக்கவுமே , எமது தகவல்கள்.

3. தெரிந்தது கடல் அளவு  என எண்ணி, இத்தளத்திலே சுய பிரசங்கம் செய்ய எண்ணியதில்லை. என்றைக்கும் எமது கட்டுரைகள் சம தளத்திலே தான் இருக்கும். படிப்பவர்கள் மற்றும் கட்டுரையாளர் இடையே சமநிலை பேணுவதே எமது நோக்கம்.

4. திறமைகள் எங்கு எப்படிக்கிடைத்தாலும் அதை மதிக்க வேண்டும் , இன்று உங்களில் பலருக்கு எம்மைவிட ஆழ்ந்த அனுபவம் மற்றும் திறமைகள் இருந்தாலும், வெளிப்படுத்த நேரமின்மையோ அல்லது வேறு காரணங்களோ இருக்கலாம், அல்லவா? நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டால், எண்ணியவை தானாக நன்மையாகும் தானே!

5. எல்லாவற்றிற்கும் மேலாக வணிகம் எமக்கு தொழில் அல்ல, வணிகம்  எமது இலட்சியம்!. ஆராய்ச்சி! தேடல்! 
    தேடலில் தொலைந்த நேற்றைய இளமைக்காலங்களை எமது காணிக்கையாக்கி , நிகழ்கால கனவுகளை, எதிர்கால இலட்சியங்களை இன்றே வென்றெடுக்க நாம் கைக்கொண்ட அதி அற்புத ஆற்றல் மிக்க, நல்லோர் கை அட்சயப்பாத்திரம் தான் வணிகம்!

6. 
இன்றைய வெற்றியைப் பதிவு செய்ய , 
இழந்ததோ, நேற்றும் ! இன்றும்! 
நாளை நம் வசமாகட்டும்!. 
நேரிய அனுபவமே நல்ல ஆசான்! நல் உரம்! 
தேடுவோம்! வெல்லும்வரை!

 தேடல்கள் மட்டும் இல்லையென்றால், வாழ்க்கைக்கு ஏது அர்த்தம்?

வாழ்த்துக்கள்!
ஞானா.